சபரிமலை
கனமழை பெய்து வரும் நிலையிலும் சபரிமலையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை கோவில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. அடுத்த நாள் 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 26 ஆம் தேதி உடன் மண்டல பூஜை முடிவடைந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. இதனால் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
தற்போது இந்த பகுதியில் கனமழை கொட்டி வருகின்றது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி சபரிமலை, சரங்குத்தி, மரக்கூட்டம் ஆகிய பகுதிகளில் வனத்துறையினருடன் இணைந்து கேரள கமாண்டோ படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இன்று 40,460 பேர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.