சென்னை:
சென்னையில் இன்று தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பெய்து வந்த கனமழையின் காரணமாகக் காய்களின் விலை கணிசமாக உயர்ந்தது. அத்துடன் ஆந்திரா, கர்நாடகா ,கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்தது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்குக் காய்கறிகளின் வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களாகக் காய்கறிகள் விலை உச்சத்திலிருந்தது.
குறிப்பாகத் தக்காளியின் விலை கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததை அடுத்து, படிப்படியாக வரத்து அதிகரித்ததால் தக்காளியின் விலை குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனையானது. அத்துடன் தக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் நவீன் தக்காளி கிலோவிற்கு ரூபாய் 90 வரை விற்பனையாகிறது. நாட்டுத் தக்காளி ரூபாய் 80க்கு விற்பனை செய்யப் படுகிறது. வரத்துக் குறைவு காரணமாகத் தக்காளி மொத்த விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel