சியால்கோட்
சியால்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கல் எறிந்து தீவைத்து கொல்லப்பட்டதில் இலங்கை அரசின் வற்புறுத்தலால் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சியால்கோட் பகுதியில் நேற்று முன் தினம் ஒரு கும்பல் அங்கிருந்த தொழிற்சாலை பணியாளர்கள் மீது கல்லெறி தாக்குதல் நடந்தது. இதில் இலங்கையைச் சேர்ந்தவரும் அந்த தொழிற்சாலை மேலாளருமான பிரியந்த குமாரா என்பவர் தீ வைத்துக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையொட்டி இலங்கையின் வெளிநாட்டு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சுகீஸ்வரா குணரத்னா பாகிஸ்தான் அரசைச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் அளித்தார். அவர் வற்புறுத்தலுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு சுமார் 100 பேரைக் கைது செய்துள்ளது.
இந்த கைதில் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து முக்கிய குற்றவாளிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த சம்பவத்துக்காகத் தாம் வெட்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த சம்பவத்துக்குக் காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.