சென்னை

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில்  போட்டியிட 1530 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் தங்கள் விருப்ப மனுவை இன்று காலை 10 மணி முதல் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்காகப் போட்டியிட விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்காகக் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று (1.12.2021) புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை வழங்கினார்கள். இம்மனுக்களைச் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

மாவட்ட வாரியாக மனுக்கள் வழங்கியவர்களின் விபரம் :

  1.  வடசென்னைகிழக்குப் பகுதியில் 270 விருப்ப மனுக்கள்
  2.  வடசென்னை மேற்கு பகுதியில் 240 விருப்ப மனுக்கள்
  3.  மத்திய சென்னை கிழக்குப் பகுதியில் 210 விருப்ப மனுக்கள்
  4. மத்திய சென்னை மேற்கு பகுதியில் 310 விருப்ப மனுக்கள்
  5. தென்சென்னை கிழக்குப் பகுதியில் 180 விருப்ப மனுக்கள்
  6. தென்சென்னை மத்தி பகுதியில் 140 விருப்ப மனுக்கள்
  7. தென்சென்னை மேற்கு பகுதியில் 180 விருப்ப மனுக்கள்
    என சென்னையில் மட்டும் 1,530 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த மனுக்களைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் கோபண்ணா, கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், செந்தமிழ் அரசு, பொதுச்செயலாளர்கள் எஸ்.ஏ. வாசு, இல. பாஸ்கரன், இமயா கக்கன் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதைப்போல் தமிழகத்தில் மீதமுள்ள 68 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களிலும் இன்றைக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் விருப்ப மனு அளிக்க மிகவும் ஆர்வம் காட்டி உள்ளனர்.”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.