டெல்லி: 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சண்பென்ட் குறித்து மேலவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில் நடைபெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின்போது ராஜ்யசபாவில் விதிகளை மீறி கன்னியக்குறைவாக நடந்துகொண்ட சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் சபைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதும், பாராளுமனற் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, 256 சட்டப் பிரிவின் கீழ், கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது, ஆகஸ்ட் 11ல் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 12 பேரை, இந்த தொடர் முழுதும் ‘சஸ்பெண்ட்’ செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் உள்ள லோபி ராஜ்யசபா மல்லிகார்ஜுன் கார்கே அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து கூறிய காங்கிரஸ் எம்.பி.,மல்லிகார்ஜுன் கார்கே, 12 எம்.பி.க்களின் எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்பது குறித்த கேள்வியே எழவில்லை. சபை விதிகளுக்கு எதிராக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப் பட்டனர். இந்த நடவடிக்கை, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பது போன்றது என்று விமர்சித்தார்.