சென்னை:
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தற்போது புதிதாக ஒமைக்ரான் உலகில் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அதிகமாக கரோனா தொற்று ஏற்பட்ட இடங்களில் மாதிரிகளைச் சேகரித்து மரபணு பரிசோதனை செய்யப்பட்டதில் எல்லாமே டெல்டா வகையாகவே இருக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் மாநில அரசுக்கென்று தனியாக முழு மரபணு பரிசோதனை கூடம் உள்ளது. எனவே, புதிய வகை தொற்று குறித்த மரபணு பரிசோதனைகளை உடனுக்குடன் மாநிலத்திலேயே மேற்கொள்ள முடியும் என்றார்.
Patrikai.com official YouTube Channel