நடிகர் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ்.
ரவீந்திரன் சதிரசேகரன் சார்பில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஸ்ரீஜார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ எனும் படத்தில் அதுல்யா ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 10 ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, முதலில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதாக இருந்த இந்தப் படம் தற்போது திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடிவரும் நடிகர் சாந்தனு குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தெரிவு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்த சாந்தனுவின் கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.