சென்னை: தமிழகத்திலேயே சத்துணவுக் கூடத்திற்கு ISO தரச்சான்று பெற்றுள்ள முதல் அரசுப் பள்ளியாக ஈரோடு அரசு பெண்கள் பள்ளி பெற்றுள்ளது. இதற்காக அந்த பள்ளியின் தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஈரோடு மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணைவு சுத்தமாகவும், சுகாதாரமாக வும் வழங்கும் வகையில், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை, சத்துணவு தயாரிக்கும் கூடம், அதற்கான பாத்திரங்களை நேர்த்தியாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் அமைத்துக்கொடுத்து, மாணவிகளுக்கு சுகாதாரமான முறையில் சத்துணவுதயாரிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். மேலும் பள்ளி மற்றும் சத்துணவு கூடத்தை சுற்றி உள்ள காலி இடங்களில் காய்கறிகளை பயிரிட்டு, அதில் இருந்து கிடைக்கும் சுத்தமான காய்கறிகளை சமைத்து மாணவிகளக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மாணவிகள் சாப்பிட்டதும், அந்த பகுதியை உடனே சுத்தம் செய்து, சுகாதாரமாக பேணி காத்தும் வருகிறார். இதற்காக பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு மேற்பார்வையிட்டு செயல்படுத்தி வருகிறார்.
இதன் காரணமாக, ஈரோடு மாநகராட்சி அரசு பள்ளி சத்துணவு கூடத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இதற்கு பாராட்டும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.