** பூமியின் வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கொழுப்பதற்குத் தாரை வார்த்த மோடி அரசு, தற்போது ஒரு படி மேலே போய்….கடல் வளத்தையும் அவர்களிடமே தூக்கிச் தருவதற்கு முடிவு செய்து விட்டது!
இதற்காக புதிய ” மீனவர் சட்டம்” ஒன்றைக் கொண்டு வர இருக்கிறது இந்த ஒன்றிய அரசு! அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?
* பன்னெடுங்காலமாக கடல் பகுதிகளில் சுதந்திரமாக மீன்களைப் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்த மீனவர்கள், இனி 12 கடல் மைல் தூரத்துக்கு மேல் சென்று மீன்களைப் பிடிக்கக் கூடாது!
*** அதிலும், குறிப்பிட்ட சில மீன்களை அவர்கள் பிடிக்கக் கூடாது! அப்படியே பிடித்தாலும், அவற்றைக் கடலிலேயே விட்டு விட வேண்டும்!
** இந்தச் சட்டத்தை மீறும் மீனவர்கள் கடும் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்! இப்படி எல்லாம் கடும் சட்டங்களைக் கொண்டு வந்து, ஆண்டாண்டுக் காலமாக கடலிலேயே வாழ்ந்து வரும் கடல் அன்னையின் பிள்ளைகளான மீனவர்களின் வயிற்றில் அடிக்கத் திட்டம் தீட்டு கிறது ஒன்றிய மோடி அரசு!
**ஆனால் ஒன்றிய அரசு வகுக்கிற 12 கடல் மைல் எல்லைக்கு அப்பால் தான் நிறைய மீன் வளம் இருக்கிறது! அவற்றை இந்த எளிய மீனவர்கள் பிடிக்கத் நடை செய்து அவர்களின் வயிற்றில் அடிக்கத் துடிக்கிறது மோடி அரசு!
*** ஆனால், மிகப் பெரிய கார்ப்பொரேட் கம்பெனிகள் மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் மீன்களைப் பிடித்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப் போகிறது ஒன்றிய மோடி அரசு!
* அவர்கள் தங்கள் பிரம்மாண்டமான கப்பல்கள் மூலம், ராட்சத வலைகளை பல கிலோ மீட்டர்களுக்கு வீசி லட்சக் கணக்கான மீன்களைப் பிடித்துப் பெரும் பணம் சம்பாதிக்கலாம்!
** இப்படி, சில பெரும் முதலாளிகள் வாழ்வில் வசந்தம் வீச, லட்சக் கணக்கான மீனவர்கள் வறுமைக்கும் தள்ளப்படும் வஞ்சனையைச் செய்யத் துடிக்கிறது மக்கள் விரோத மோடி அரசு!
** இதைக் கடுமையாக எதிர்க்கும் விதமாக, நேற்றைய தினம்( 22.11.2021) டெல்லியில் ஒன்றிய மீன் வளத் துறை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நமது தமிழக மீனவப் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்குத் தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்!
** ஓவியர் இரா. பாரி.