டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் , சீன படையினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வீரமரணம் அடைந்த  ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு இன்று மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டு உள்ளது. இதை , அவரது மனைவி சந்தோஷி மற்றும் தாயார் மஞ்சுளாவிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.

மஹா வீர் சக்ரா, நிலத்திலோ, கடலிலோ, வானத்திலோ எதிரியின் முன்னிலையில் காட்டப்படும் துணிச்சலான செயல்களுக்காக வழங்கப்படு கிறது. இந்த விருது தற்போது வீரமரணம் அடைந்த ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடல்மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்திluள்ள கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் பேட்ரோல் பாயின்ட் 14 அருகே ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவத் துருப்புகள் டென்ட் ஒன்றை அமைத்ததாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படையினர் அந்த டென்ட்டை அகற்ற அந்தப் பகுதிக்குச் சென்றதாகவும், அப்போது சீன வீரர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையொட்டி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய – சீன வீரர்கள் இடையே கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த மோதல் சம்பவத்தில் சீன ராணுவ வீரர்கள் 45 பேர் வரை இறந்திருக்கலாம்  என்றும் தகவல்கள் வெளியாகின.

கர்னல் சந்தோஷ் பாபு, இந்திய ராணுவத்தின் கர்னல் அந்தஸ்தில் உள்ள ஒரு துணிச்சலான சிப்பாய், தெலுங்கானா மாநிலத்தின் சூர்யாபேட்டை நகரைச் சேர்ந்தவர். அவர் சைனிக் பள்ளியில் தனது கல்வியைப் பெற்றார், மேலும் ஐடிஏவில் பட்டம் பெற்றார். அவர் 37 வயதில் கர்னல் நிலையை அடைந்தார். கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) நடத்திய கொடூரமான தாக்குதலை எதிர்த்துப் போராடி, கண்காணிப்புப் புள்ளியில் தனது இன்னுயிரை ஈந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு இன்று மரணத்திற்குப் பின் மகாவீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.  இரு தரப்பிலும் எல்லையில் படைகளைக் குறைப்பதற்கான உயரதிகாரிகள் மட்டத்திலான பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் தன்னுயிரை இழந்த  ஹீரோ கலோனல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் கொடுக்கப்பட்டுள்ள ஆவணச் சான்றிதழில்,  கர்னல் பாபு கடுமையாக காயமடைந்த போதிலும், கர்னல் பாபு எவ்வாறு முன்னால் இருந்து பாதுகாப்பை வழிநடத்தினார் என்பதை விவரிக்கப்பட்டு உள்ளது. அவரது வீரத்தை  அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு மரணத்திற்குப் பின் இராணுவ  மரியாதை வழங்கப்பட்டது, இது இரண்டாவது மிக உயர்ந்ததாகும். பரம் வீர் சக்ராவிற்குப் பிறகு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது மகாவீர் சக்ரா.

மஹா வீர் சக்ரா, நிலத்திலோ, கடலிலோ, வானத்திலோ எதிரியின் முன்னிலையில் காட்டப்படும் துணிச்சலான செயல்களுக்காக வழங்கப்படு கிறது.  ‘ஆபரேஷன் பனிச்சிறுத்தை’யி ன் போது கல்வான் பள்ளத்தாக்கில் கண்காணிப்பு நிலையத்தை நிறுவிய போது சீன ராணுவ தாக்குதலை கர்னல் சந்தோஷ் பாபு எதிர்த்ததாகவும்,  “ஆபரேஷன் பனிச்சிறுத்தையின் போது கல்வான் பள்ளத்தாக்கில் (கிழக்கு லடாக்) நிலைநிறுத்தப்பட்ட 16 பீகார் படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரி கர்னல் பிகுமல்ல சந்தோஷ் பாபு, எதிரிகளை எதிர்கொள்ளும் ஒரு கண்காணிப்பு நிலையத்தை நிறுவ பணிக்கப்பட்டார்” என்று மேற்கோள் காட்டப்பட்டது.

“பதவியை வைத்திருக்கும் போது அவரது நெடுவரிசை எதிரிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது, அவர் ஆபத்தான மற்றும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கினார், மேலும் அருகிலுள்ள உயரங்களில் இருந்து கனரக கற்களை வீசினார். எதிரி வீரர்களின் வன்முறை மற்றும் ஆக்ரோஷமான நடவடிக்கையால் பயப்படாமல், உண்மையான சேவை மனப்பான்மை கொண்ட அந்த அதிகாரி, இந்தியப் படைகளை பின்னுக்குத் தள்ளும் எதிரியின் முயற்சியைத் தொடர்ந்து எதிர்த்தார். முன்மாதிரியான தலைமைத்துவத்தையும், புத்திசாலித்தன மான தொழில்முறையையும் வெளிப்படுத்தினார். அவர் எதிரியின் முகத்தில் வெளிப்படையான துணிச்சலைக் காட்டினார் மற்றும் தேசத்திற்காக மிக உயர்ந்த தியாகம் செய்தார், ”என்று அரசாங்க ஆவணம் தெரிவித்துள்ளது.