கோவை: கோவை வஉசி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ரூ. 89.73 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ. 587 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 70 திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், சென்னை போல் கோவை மாநகர வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தர அரசு முடிவு செய்துள்ளது என கூறினார்.
- சென்னை போல கோவைக்கு முக்கியத்துவம்
- சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை
- சிறைசாலை புறநகருக்கு கொண்டு செல்லப்படும்
- காந்திநகரில் செம்மொழிப் பூங்கா
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று மக்கள் நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்s கோவை சென்றார். கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று மதியம் நடைபெற்ற பங்கேற்று முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 646.61 கோடி ரூபாய் மதிப்பில் 25,123 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பாகுபாடின்றி சேவையாற்றுகிறோம். ஆட்சியை அமைத்த அன்றே உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனித்துறையை உருவாக்கினோம். லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிறைவேற்ற முடியாத மனுக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இன்றும் வழி நெடுகிலும் என்னிடம் மனு அளிக்கப்படுகிறது. மிகப்பெரிய திட்டங்கள் போட்டாலும் தனிநபர் கோரிக்கை சார்ந்த மனுக்களை நிறைவேற்றுவது முக்கியம்.
கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சி காலத்தில் திட்ட சாலை பணிகள் மேற்கொள்ள வில்லை. மீண்டும் திட்ட சாலைகள் மேம்படுத்த உதவி செய்யப்படும்.
மாநகரில் உள்ள சிறைசாலை புறநகருக்கு கொண்டு செல்லப்படும்.
காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்”
இவ்வாறு பேசினார்.
இதன்பிறகு மீண்டும் கோவை திரும்பும் முதலமைச்சர் கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 11 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் வருகையால் இன்று கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மக்கள் உஷாராக அதை பார்த்து பயணம் செய்யுங்கள் என்று கோவை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். முதல்வர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.