டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இது கடந்த 538 நாட்களுக்கு பிறகு குறைவான பாதிப்பு. நேற்று ஒரே நாளில்  249 உயிரிழந்துள்ளனர், 12,510 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக 8,488  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 538 நாட்களுக்கு பிறகு குறைந்த பாதிப்பு. அதுபோல, நேற்றைய பாதிப்புகுள்ளான 8448 பேரில்,5080 பேர் கேரளாவில் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,18,901 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும் 249 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.உயிரிழப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று உயிரிழந்த 24 பேரில் கேரளாவில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,65,911 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,  மேலும் 12,510 பேர் தொற்றில் இருந்து  குணமடைந்துள்ளனர். இவர்களில் 7908  பேர் கேரளாவில் குணமடைந்து உள்ளனர். இதன்மூலம் மொத்த  குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,34,547  ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.31% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட1,18,443  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.34% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,99,337  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,16,87,28,385  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 7,83,567 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதுவரை 63,25,24,259* சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

[youtube-feed feed=1]