
ரியோ ராஜை வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை இயக்கியவர் கார்த்திக் வேணுகோபால். அவருக்கு நவம்பர் 15ம் தேதி கோவையில் திருமணம் நடந்தது.
சிவகார்த்திகேயனுக்கு அழைப்பிதழ் வைத்த போது தன்னால் திருமணத்திற்கு வர முடியாத சூழல் என்று கூறியிருக்கிறார். ஆனால் யாருக்கும் சொல்லாமல் தனியாக கோவைக்கு சென்று திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மேலும் மணமகனுக்கு தங்கச்சங்கிலியை பரிசாக அளித்திருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel