கோயமுத்தூர்: கோவையில் செயல்பட்டு வரும் அரசுக்கல்லூரி பேராசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவ மாணவிகள், கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அரசுக் கலை அறிவியல்  கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் ரகுநாதன். இவர், தன்னிடம் படிக்கும் கல்லூரி மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் சாட் செய்வதாகவும் மாணவிகள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே புகார் எழுந்தது. இதுகுறித்து ஏற்கனவே கல்லூரி முதல்வரை சந்தித்து புகார் கூறிய நிலையில், அவர் ஏதும் நடவடிக்கை எடுக்காததால், இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். புகாரில், மாணவி களிடம் இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ்அப்பில் பேசிய ஸ்கிரீன் ஷாட்களையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.