சென்னை: தமிழ் திரையுலகின் முன்னாள் முன்னணி நடிகையான சினேகா, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, சென்னையைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.25லட்சத்தை மூதலீடு செய்துள்ள நிலையில், அதற்கான வட்டியும், முதலும் தர மறுப்பதாக, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சினேகா, நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகறார். இவர் திரையுலகில் பிசியாக இருந்தபோது, சென்னை கானாத்தூரில் உள்ள கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.25 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி, மாதம் வட்டியாக சினேகாவுக்கு கவுரி நிறுவனம் ரூ.1.80 லட்சம் கொடுக்க வேண்டும்.
ஆனால், ஆரம்ப காலத்தில் வட்டியை சரியாக கொடுத்து வந்த கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம், பின்னர் வட்டியை கொடுக்கவில்லை. இது தொடர்பாக சினேகா தரப்பில் பலமுறை கேட்டும் சரியான முறையில் பதில் வராத நிலையில், தனது முதலீடு பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கும் ஏற்றுமதி நிறுவனம் முறையாக பதில் தெரிவிக்காததால், கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தினர் தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை கானாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசின் பொதுத்துறை வங்கிகளில் ரூ.1 லட்சத்துக்கு அதிகபட்சமாக வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் முதல்8 6.500 வரை மட்டுமே வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்தால், சினேகா முதலீடு செய்துள்ள ரூ.25 லட்சத்துக்கு வருடத்திற்குதான் ரூ.1.62,500 வட்டி கிடைக்கும். ஆனால், சினோகாவோ, மாதம் ரூ.1.80 லட்சம் வட்டி கிடைக்கும் என்று ஆசையில் பணத்தைப் போட்டுவிட்டு, தற்போது ஏமாந்து விட்டதாக புகார் தெரிவித்து உள்ளார்.