கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் தன் கண்களை தானம் செய்தார். அதன் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைத்திருக்கிறது. புனித் ராஜ்குமாரின் நினைவிடம் அமைந்துள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கடந்த 16 நாட்களாக ரசிகர்கள் அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பெங்களூருக்கு சென்ற நடிகர் விஷால் புனீத்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

1,800 பிள்ளைகளுக்கு புனீத் ராஜ்குமார் இலவச கல்வி வழங்கி வந்தார். இனி அந்த 1,800 பேரின் கல்விக்கு நான் பொறுப்பு என்று எனிமி பட விழாவில் தெரிவித்தார் விஷால்.