சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறைதண்டனைக்கு காரணமாக இருந்த தமிழ்நாடு காவல்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி நல்லம நாயுடு காலமானார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, அப்போது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த என்.நல்லம நாயுடு விசாரணை நடத்தி, ஜெயலலிதா ஊழல் புரிந்ததற்கான ஆதாரங்களை சேகரித்து, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனத்தை உருவாக்கியவர். இந்த வழக்கு சுமார் 21 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், இறுதியில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்யது.
அதிமுக அரசின் பல்வேறு மிரட்டல்களுக்கு பயப்படாமல், திறமையாக செயல்பட்டு, ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரியான, நல்லம நாயுடு, இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு காவல்துறையினர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.