
கடந்த 2011-ம் ஆண்டு லத்திகா எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் எனும் நடிகர் சீனிவாசன்.
இவர் ஒரு மருத்துவர் என்றாலும், திரையுலகில் காமெடியன் கதாபாத்திரத்திலேயே நடித்தார்.
பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு மயங்கினார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
ஒரு மாத காலமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறாராம். இந்நிலையில் மருத்துவமனையில் பவருக்கு சிகிச்சை அளிக்கும்போது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நடக்கக் கூட முடியாமல் பவர் வீக்காக இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
Patrikai.com official YouTube Channel