பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பாவ்னி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு , சுருதி , மதுமிதா என பிக் பாஸ் வீட்டை விட்டு ஆறு பேர் வெளியேறினர்.

முதல் ப்ரோமோவில் இந்த வாரம் யார் தலைவராகக் கூடாது என்பதற்கான காரணத்தை தைரியமாக சொல்ல வேண்டும் என பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வருகிறது. பிரியங்கா, சிபி, ஐக்கி பெர்ரி, நிரூப் ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்கா, சிபி, ஐக்கி மற்றும் நிரூப் ஆகிய நால்வரும் தலைவர் போட்டி டாஸ்க்கில் போட்டியிட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

“நான் உங்க கைப்பாவை ஆயிடுவேன். நீங்க என்ன கண்ட்ரோல் பண்ணிடுவீங்க அப்படின்னு நிறைய பேர் நினைச்சிட்டு இருக்கீங்க. நீங்களும் அப்படி நினைச்சதில்ல. நானும் அப்டி நினைச்சது கிடையாது.” என்று இமான் அண்ணாச்சி தண்ணீர் ஊற்ற வரும் போது, நிரூப் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அதுக்குத் தான் நான் அவர லாஸ்டா வர சொன்னேன்” என்று பிரியங்கா பதில் கொடுத்தார்.

இதனால் கடுப்பான அண்ணாச்சி. “இந்த புரிதல் பிரியங்கா கிட்ட உண்மையிலேயே குறைவா தான் இருக்கு” என்று தண்ணீரை பிரியங்காவின் பாட்டிலில் ஊற்றி விட்டார். இதை எதிர்பார்க்காத பிரியங்கா தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

கடுப்பான பிரியங்கா “தேங்க்யூ அண்ணாச்சி! உங்க வார்த்தைய நீங்க எப்படி மாத்துவீங்கன்றது தெரிஞ்சி போச்சு. இனிமே சத்தியமா நான் உங்க கிட்ட இருந்து எதுவுமே எதிர்பார்க்க மாட்டேன்” என்று தனது ஏமாற்றத்தை வெளிப்படையாகக் கூறினார்.

மூன்றாவது ப்ரோமோவில், நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்தவர்கள் விவரம் குறித்து பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில், ஐக்கி, பாவ்னி, சிபி, இமான் மற்றும் அபினய் என கூறப்படுகிறது. இந்த நாமினேஷன் கார்டன் ஏரியாவில் நடக்கிறது. அதில் ஒரு ஸ்டாண்ட் அமைத்து போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளரின் புகைப்படத்தில் ஸ்பிரே அடிக்குமாறு கூறப்படுகிறது.