சென்னை: தமிழ்நாட்டில் வேலையில்லாமல் அவதியுறும் பட்டதாரி இளைஞர்களுக்கு, மாநில அரசு வழங்கும் மாதம் ரூ.600 உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு வேலை இல்லாத நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உளளது.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ள நிலையில், படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு,  படித்த வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான   விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆண், பெண் அனைவரும் விண்ணப்பித்து பயன் அடையலாம். தங்களுடைய தகுதிக்கு ஏற்ப பணம் உங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தபடுகிறது

அதன்படி, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200 ,என்றும் எஸ்எஸ்எல்சி (10வது)  தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600 , மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

படித்த வேலைவாய்ப்பு இல்லாத உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பு காலம் 5 ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் தாங்கள் உதவி தொகையினை பெற இயலும்

கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை முழுமையாக தமிழ்நாட்டிலேயே படித்திருக்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு வருடம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

SC/ST பிரிவினருக்கு 30.09.2021 அன்று 45 வயதும். மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000 க்கு மிகையாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சசரம்பு இல்லை.

பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை, அறிவியல் இது போன்ற தொழில்நுட்பப்பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேராக சென்று விண்ணப்பங்களை பெறலாம்.

விண்ணப்பங்களை பெற்ற பின் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து தங்கள் ஊரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் கையொப்பம் பெற்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

இதற்கான கடைசி தேதி 30.11.2021.

விண்ணப்பம் மற்றும் முழுமையான தகவலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

Emailing Emailing uaApplication (1)