சென்னை
நவம்பர் 14 முதல் 20 வரை இரவு நேர டிக்கட் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் ரயில் சேவைகள் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டன. குறிப்பாகச் சிறப்பு ரயில்கள் அதுவும் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பயணிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் முன்பதிவு இல்லாத பயணம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதையொட்டி தெற்கு ரயில்வே நிர்வாகம் இனி முன்பதிவு இல்லாத பயணம் சலுகைகள் ஆகியவை தொடரும் எனவும் இனி ரயில் சேவைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவித்துள்ளது. இதையொட்டி இணையத்தில் வசதியை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதையொட்டி இன்று இரவு முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை ரயில் டிக்கட் முன்பதிவு வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்ட்டுள்ளது. இணைய வசதியை மேம்படுத்தி கொரோனாவுக்கு முந்தைய கால ரயில் சேவையை அமல் படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் கூறி உள்ளது.