சென்னை: தமிழகத்தில் கொட்டி மழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை இன்று கடலூர் டெல்டா மாவட்டங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்ததுடன், விவசாயிகளை சந்தித்து குறை கேட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாருதிநகர் பகுதியில் வெள்ள பாதிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை, நிவாரண உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, கடலூர் மாவட்டம், ஆடுர்அகரம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கடலூர் மாவட்டம், ஆடுர்அகரம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களையும், வெள்ள பாதிப்புகளை விளக்கும் புகைப்படங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாருதிநகர் பகுதியில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை, நிவாரண உதவிகளை வழங்கினார்.