சென்னை: தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இன்று (சனி) மற்றும்  நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.  ஆனால், சென்னையில் மழை பாதிப்பு காரணமாக வாக்காளர் சிறப்பு முகாம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.  இந்த சிறப்பு முகாம்கள்,

தமிழ்நாட்டில் விரைவில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நவம்பர் 1ந்தேதி வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, 2022ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சேர்க்கும் வகையில் வாக்காளர் சிறப்பு முகாம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம், நீக்கம், இடமாற்றம் போன்றவை செய்ய சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த (நவம்பா்) மாதத்தில் நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, முதல் முகாம் இன்று (நவம்பா் 13, 14)  நடைபெறுகிறது. நாளை 2வது நாள் முகாமும், தொடர்ந்து, அடுத்து வரம் சனி, ஞாயிறும் முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

சென்னையின் 16 சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளில் நவ.13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முகாம்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.