அமராவதி: மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 உடனடி நிவாரணம்  வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வங்க கடலில் உருவனான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை சென்னை அருகே  கரையை கடந்தது. இந்தகாற்றழுத்ததாழ்வு மண்டலம் காரணமாக சென்னை கடுமையாக பாதிப்புக்குள்ளாது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரி வரை கனமழை கொட்டியது.

சென்னை அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால்  அங்கு கனமழை பெய்து வருகிறது.  நெல்லூர், பிரகாசம், சித்தூர் மற்றும் கடப்பா போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகள், அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறும் அவ்வப்போது நிலைமையை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், மழை பாதிக்கப்பட்ட பகுதிகளைச்சேர்ந்த அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியதுடன், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்கவைக்க அறிவுறுத்தியதுடன்,  மழையினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரு குடும்பத்திற்கும் தலா 1,000 ரூபாய் உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மையம் அமைக்கவும், அவர்களுக்கு உடனடி நிவாரண நிதியாக குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும்,  மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.