சென்னை: கடந்த 4 நாட்களாக பெய்த அடை மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளி மக்களில், 4800 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர் என தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இன்று (12.11.2021) காலை 8.00 மணிவரை வெள்ளம் சூழ்ந்த மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்த 4810 நபர்கள் சென்னை பெருநகர காவல் துறையினரால் மீட்கப்பட்டு 87 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் அடங்கிய 13 சென்னை பெருநகர காவல் மீட்பு குழுக்கள் (Greater Chennai Polloe Rescue Team) அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று (12.11.2021) காலை 8.00 மணிவரை சென்னை பெருநகர் வடக்கு மண்டலத்தில் C-3 ஏழுகிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடம். H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கெனால் தெரு சமுதாய நலக்கூடம். M-2 MM காலனி பகுதியில் உள்ள எவர்வின் பள்ளி, கிழக்கு மண்டலத்தில் G-1 வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு மண்டலத்தில் P- புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள சமுதாயநலக்கூடம், கன்னிகாபுரம், தாஸ் நகர் மாநாகராட்சி தடுநிலைப்பள்ளி, தெற்கு மண்டலத்தில் J-4 சைதாப்பேட்டை, கால் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி J10 செம்மஞ்சேரி காயல் நிலை எல்வைக்குட்பட்ட பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி. S-15 சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கார்லி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 87 தற்காலிக முகாம்களில் 1,844 ஆண்கள், 1,963 பெண்கள், 994 குழந்தைகள், 9 திருநங்கைகள் என மொத்தம் 4810 நபர்கள் மீட்கப்பட்டுகளுக்கு உணவு வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.