டில்லி

கிரிப்டோ கரன்சி குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சிகளின் மீதான மோகம் அதிகரித்து வருகின்றது. எனினும் இன்றளவிலும் இந்தியாவில் இது இன்னும் நம்பகமான ஒரு முதலீடாக இல்லை எனலாம்.  குறிப்பாக கிரிப்டோகரன்சி மீதான தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், கிரிப்டோகரன்சிகள் வர்த்தகமானது அதிகரித்துள்ளது.

மத்திய அரசு கிரிப்டோகரன்சிகள் குறித்தான சட்டத்தினை இன்னும் இயற்றவில்லைஅரசு இது குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி  பலதரப்பிலும் இது குறித்த கருத்துகளைக் கேட்டு வருகின்றதுஇது குறித்த தெளிவான நிலைப்பாடு மக்கள் நலன் கருதி விரைவில் வரலாம்.   தவிரப் பல கட்ட எச்சரிக்கைகளுக்குப் பிறகு விரைவில் கிரிப்டோகரன்சிகளுக்கான கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம்.

கிரிப்டோ கரன்சிகளன பிட் காயின் மற்றும் எதர் மதிப்பு கடந்த செவ்வாய்க்கிழமையன்று உச்சத்தினை தொட்ட நிலையில், தற்போது மீண்டும் சரிவினைக் கண்டுள்ளன.  அதே வேளையில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பார்க்கும்போது இருமடங்காக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கிரிப்டோகரன்சி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்” மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத் தன்மை கண்ணோட்டத்தில் டிஜிட்டல் கரன்சிகள் மிகக் கவலையை ஏற்படுத்துகின்றன. கிரிப்டோகரன்சிகள் குறித்து இன்னும் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை” என எச்சரித்துள்ளார். .

ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த எச்சரிக்கையானது இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில், குறிப்பாகச் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வரும் இந்த நிலையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.