சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு போதை மருந்து சப்ளை செய்த குற்றச்சாட்டின்பேரில், முடக்கப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தியின் வங்கிக் கணக்குகளை ரிலீஸ் செய்ய போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 மாதங்களுக்குப் பிறகு அவரது வங்கி கணக்கு முடக்கம் ரத்தாகியுள்ளது. மேலும் அவரது லேப்டாப் மற்றும் மொபைல் போனை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அவரது மடிக்கணினி மற்றும் மொபைல் ஃபோனைத் திரும்ப ஒப்படைக்க பிணையாக 1 லட்சம் பாண்ட் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விசாரணை முடியும் வரை செல்போன் மற்றும் லேப்டாப்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டும், விற்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரியா கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் இருந்தார். அவரது சகோதரர் ஷோக், மூன்று மாதங்கள் சிறையிலிருந்தார். பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். ரியா மற்றும் ஷோக் ஆகிய இருவரும் போதைப்பொருட்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காக வாங்கவில்லை, மாறாக சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு சப்ளை செய்வதற்காக போதைப்பொருட்களை வாங்கியதாக போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சி திரும்பத் திரும்ப கூறியது. இந்த நிலையில்தான், ரியா வங்கி கணக்கு முடக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.