லக்னோ: 2022ம் ஆண்டு நடைபெறும் உ.பி. சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். பெரும்பான்மை பெறும் என அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்து உள்ளார்.
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அதனால், 2022ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.
ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதற்காக பிரியங்கா இப்போதே களத்தில் இறங்கி உள்ளார். தமிழ்நாட்டில் அறிவக்கப்படுவது போல, இலவச ஸ்கூட்டர் என பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களிடையே ஆதரவை திரட்டி வருகிறழர்.
அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது. மேலும் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் தனித்து போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், அகிலேஷ் யாதவ் போட்டியிட மாட்டேன் என்று கூறி உள்ளார்.
இந்த நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, வரும் தேர்தலில் தங்களது கட்சி தனித்து போட்டி யிடும் என்றும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என கூறியதுடன், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 2022சட்டமன்ற தேர்தலில்பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பான்மை பெறும் என்று கூறியவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை இந்து-முஸ்லிம் விவகாரமாக இரு கட்சிகளும் விரும்புவதாக கூறியதுடன், இந்த விஷயத்தில் சமாஜ்வாடி கட்சியும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்’ என வர்ணித்தார்.
பாஜக, காங்கிரஸ், சமாஜ் வாதி உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட தயாராகி வரும் நிலையில், தற்போது பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நான்குமுனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.