
நடிகை ப்ரியாமணி 2017-ல் முஸ்தபா ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அதிகம் சினிமாவில் நடிக்காமல் இருந்தவர், தி பேமிலி மேன் வெப் தொடருக்குப் பின் மீண்டும் பிஸியானார்.
இந்நிலையில், முஸ்தபா ராஜுவின் முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமல், ப்ரியாமணியை திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் முஸ்தபா – ப்ரியாமணி திருமணம் செல்லாது எனவும் கூறினார்.
இதற்கு முஸ்தபா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு இக்குற்றச்சாட்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் வதந்தி கிளம்பியது.
இந்நிலையில் தீபாவளியை கணவர் முஸ்தபாவுடன் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ப்ரியாமணி.
[youtube-feed feed=1]