சேலம்: தமிழ்நாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரியில் நீர்வரத்து அதிகாரித்து காணப் படுகிறது. இதனால் நாளை மாலைக்குள் மேட்டூர் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அனண யில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  முக்கொம்பு அணைக்கட்டில் கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை  10,000 கனஅடி நீர் திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக அளவு கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம்  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டுவில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் அப்படியே மேட்டூர் அணைக்கு செல்வால், விரைவில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரிக் கரையோ அணை நிரம்பினால் காவிரி காரையோர பகுதிகளான  சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு நீர் திறந்துவிடப்படும். எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுபோல, திருச்சி  முக்கொம்பு அணைக்கட்டில் கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை முதல் 10,000 கனஅடி நீர் திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி அருகே காவிரியில் கலக்கும் புதூர் வாய்க்காலின் குறுக்கே சுமார் 2500-3,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முக்கொம்புவில் இருந்து மாலை 6 மணி முதல் 10,000 கனஅடி நீர் கொள்ளிடத்தில் திருப்பி விடப்படும்” கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆட்சியர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து  100 கனஅடி நீர் திறக்கப்பட்டாலும், மழை காரணமாக திங்கள்கிழமை காலை முக்கொம்பு வழியாக 14,992 கனஅடி தண்ணீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்கும் வகையில், மழைநீரின் ஒரு பகுதியை கொள்ளிடத்தில் திருப்பி விட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

. காவிரி ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்ஃபி எடுக்க வேண்டாம்’’ என்றும் எச்சரித்துள்ளார்.