சென்னை: வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளதால், அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24மணி நேரத்தில் மேலும் வலுவடைவதுடன், வரும் 11ம் தேதி வட தமிழகத்தை நோக்கி நெருங்குவதால் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை உள்பட பல பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிவதால் உபரி நீர் திறந்து விடப்படு கிறது. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ள தால் மக்கள் இருளில் சிக்கி தவித்தனர். பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து 11ம் தேதி வட தமிழகம் அருகே வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் அரபிக்கடலில் ஏற்பட்டு உள்ள தாழ்வு நிலை காரணமாக மேற்கு தமிழ்நாட்டிலும், மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதிகளிலும், கேரளாவை ஒட்டிய தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் ஏற்பட்டுள்ள தாழ்வு நிலை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை வெளுத்துக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.