சென்னை: தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 3 நாட்களா சென்னை உள்பட வடமாட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளதுடன், சாலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிகிறது. தலைநகர் சென்னை வெள்ளத்தில் மிதந்து கிடக்கிறது. சென்னையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக இது வரை 4 பேர் பலியாகி உள்ளனர். 47 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. சுமார் 260 வீடுகள் பாதிப்பு அடைந்தன. திடீரென்று ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்று கூறினார்.