
பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது, நடிகர் அஜித் படப்பிடிப்பிற்கு நடுவே மோகன்லால் நடித்த மரக்கார் படத்தின் படக்குழுவினரை சந்தித்தார். அப்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித் – மோகன்லாலுடன் இருக்கும் புதிய வீடியோவை மரக்கார் படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது.
BTS 1 from @MarakkarMovie #Marakkar #MarakkarLionoftheArabianSea @priyadarshandir @antonypbvr @aashirvadcine https://t.co/s9L7C2m4lZ
— Mohanlal (@Mohanlal) November 4, 2021
Patrikai.com official YouTube Channel