பழனி: தமிழகஅரசு அறிவித்தபடி ஊக்கத்தொகையான ரூ.5ஆயிரம் வழங்காததை கண்டித்து, பழனி கோவிலில் மொட்டை போடும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகஅரசு, அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் அர்ச்சகர்கள், மொட்டை போடும் தொழி லாளர்கள் என பலருக்கு மாதாந்திர ஊக்கத்தொகை என்ற பெயரில் ஊதியம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் மொட்டை போட பணம் செலுத்தவில்லை, மொட்டை இலவசம் என அறிவித்தது. அதன்படி, திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வந்த 1,749 தொழிலாளர் களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அதற்கான நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், கடந்த மாதம் பணியாற்றியதற்கான ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பக்தர்களிடம் தட்சனை பெற முடியாத நிலையில், தீபாவளியை யொட்டி அரசின் ஊக்கத்தொகையான ரூ.5 ஆயிரமாவது கிடைக்கும் என எதிர்பார்த்தி ருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதையடுத்து, பழனி முருகன் கோயிலில் மார் 300-க்கும் மேற்பட்ட மொட்டை போடும் ஊழியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து, அரசை கண்டித்த நிலையில், மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.