
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லைகர்’ படத்தில் சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமான மைக் டைசன் நடிக்கிறார். Lion – Tiger இரண்டையும் இணைந்து லைகர் (Liger) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா ஒன்றில் அவர் நடிப்பது இதுவே முதல்முறை.
அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார்.கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் பான் – இந்தியா திரைப்படமாக லைகர் உருவாகி வருகிறது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மைக் டைசன் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் டைசன் தனது ட்ரேட் மார்க் ஆக்ரோஷத்துடன் இருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel