சென்னை:
இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூக நீதியையும் காப்பதே இயக்கத்தின் பணி என்றும்,
அஸ்வினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல..மரியாதை!அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், பூஞ்சேரி இருளர், குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ் வழங்கினேன்; இம்மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது, இதேபோல் 2 வாரக் காலத்துக்குத் தமிழ்நாடு முழுக்க இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.