கோவை:
தீபாவளியைக் கொண்டாட்ட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த மூன்று பேர் தீபாவளியை விடிய விடிய மது அருந்தி வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்தனர். இதையடுத்து விடிய விடிய மது அருந்திய அவர்கள் மூன்று பேரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கிருந்த மது பாட்டில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.