சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் இனிமேல் நடத்தும் செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக செமஸ்டர் மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவதால், இனிமேல் செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் நேரடியாக எழுத்து தேர்வாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
அதன்படி இறுதியாண்டு, தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், internal, practical உள்ளிட்ட தேர்வுகள் இனி நேரடியாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel