சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, நடப்பாண்டு 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, மாணாக்கர்களுக்கு உதவிகளை வழங்கினார்.
Patrikai.com official YouTube Channel


