டில்லி

ன்று இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவர் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஆவார்.  இதுவரையில் இந்தியாவில் பிரதமர் பதவி வகித்த ஒரே பெண்மணி இந்திரா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.   இவரது தந்தை நேரு மற்றும் மகன் ராஜீவ்காந்தி ஆகியோரும் பிரதமர் பதவி வகித்தவர்கள் ஆவார்கள்.

இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அன்று தனது இல்லத்தில் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இவரது மறைவு இந்தியாவை மட்டுமின்றி பல உலக நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இன்று இந்திரா காந்தியின் நினைவு நாள் ஆகும்.  இதையொட்டி இந்திரா காந்தியின் பேரனும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தி உள்ளார்.