வாஷிங்டன்

மெரிக்காவில் உள்ள பெரும் செல்வந்தர்களுக்கு புதிய சொத்து வரி விதிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமூக நலத் திட்டங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தை தடுக்க ரூ.1.75 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளார்.  தற்போது அமெரிக்க அரசால் உடனடியாக இதற்கான நிதி ஆதாரத்தை ஏற்பாடு செய்வதில் சிரமம் உள்ளதாகக் கூறப்படுகிறது.  எனவே அதிபர் ஜோ பைடன் ஒரு புதிய திட்டம் அறிவிக்க உள்ளார்.

அதன்படி ஆண்டுக்கு ஒரு கோரி டாலருக்கு அதிகம் மூலதன வருவாய் ஈட்டுவோருக்கு 5% சொத்து வரியும்  ஆண்டுக்கு 2.5 கோடிக்கும் அதிகமாக மூலதன வருவாய் ஈட்டுவோருக்கு 8% சொத்து வரியும் விதிக்க ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.  தவிர இவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்தாலும் கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே பெரும் செல்வந்தர்களுக்கு 37% வருமான வரி விதிக்கப்படுவதால் இந்த கூடுதல் சொத்து வ்ரி விதிக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் இது முட்டாள் தனமானது எனவும் பைத்தியக்காரத்தனமான வரி விதிப்பு எனவும் விமர்சித்துள்ளார்.  இது போலப் பல பெரும் செல்வந்தர்கள் ஜோ பைடனின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]