நல்ல வேளையாக ரஜினி இருக்கும்போதே அவருக்கு இந்த ” தாதாசாகேப் பால்கே” அவார்டு தரப்பட்டிருக்கிறது!
ஆனால், அவர் நடித்த ” முள்ளும் மலரும்”, “எங்கேயோ கேட்ட குரல்”, ” புவனா ஒரு கேள்விக் குறி”, ஆறிலிருந்து அறுபது வரை” போன்ற சில திரைப்படங்களில் நடித்தது தான் இந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கக் காரணமாக அமைந்தது என்பதே மக்களின் கருத்தாகும்!
இரண்டாவதாக, கேரளத்தில் அண்மையில் பெய்த கனத்த மழை.. வெள்ளத்தால், மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டது வரலாறு காணாத சோகம்!
கேரள அரசு முன்னேற்பாடுகளில் சரியான திட்டமிடாதது முக்கியமாக விமர்சிக்கப்படுகிறது!
ஆனால், தண்ணீர் வீணாகக் கடலில் கடந்தாலும் பரவாயில்லை…. தமிழகத்துக்குத் தரக்கூடாது என்று கேரளம் நினைத்தது…
அடுத்து.. இந்த இக்கட்டான நிலையிலும் அங்குள்ள சிலர், முல்லைப் பெரியாறு அணை பற்றி அவதூறுகள் பேசி வருவதை, கேரள அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது…
இவையெல்லாம்….அண்டை மாநிலமும், கேரளத்தோடு நல்லெண்ணப் புரிதலுடன் உள்ளதுமான தமிழகத்தோடு கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகிறதே என்பது தான் மக்கள் கவலை!
-ஓவியர் பாரி…