சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு கடன் தரவேண்டும், மாணாக்கர்களுக்கு கல்வி கடன் வழங்க வண்டும் என்று இன்று நடைபெற்ற வவங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வங்கிகளை ஊக்குவிப்பது குறித்தும், மாநில அரசின் வளர்ச்சியில் அரசுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில் வாங்கியாளர்களை சந்தித்து முதல்வர் உரையாற்றினார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று வங்கியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத்தில் உள்ள வங்கிகளின் சார்பில் முகவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , நாட்டின் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தஅரசுடன் வங்கிகளும் கைகோர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
ஏழை, எளிய மக்கள் விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கு வங்கிகள் உழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசால் வகுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயன்தர அரசுடன் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும்.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சவால் உள்ளது
கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு விற்பனையாளர்கள், அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.
மைக்ரோ கிரெடிட் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கவனிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வங்கிகள் கடன் வழங்க வேண்டும் உணவு கோரிக்கை விடுத்தார்.
அனைத்து வங்கிகளும் சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவுகளை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் தர வேண்டும்
மீன்பிடி தொழில்களுக்கு கடன்கள் வழங்கவேண்டும் என்பட பல்வேறு வேண்டுகோள் விடுத்தார்.