புதுடெல்லி:
க்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்த கார் மோதியதில் விவசாயிகள் இறந்ததாகவும், இதுவே பின்னர் வன்முறையாக மாறியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதையடுத்து, மத்திய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், ஆசிஷ் மிஸ்ரா திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு டெங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.