ஐதராபாத்
நேற்று தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
நேற்று தெலுங்கானா மாவடத்தில் சில இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நில நடுக்கம், கரீம்நகர் சுன்னம் பட்டி வாடாம், சீதாராம் பள்ளி, சீதாராம்பூர், நஸ்பூர் உள்ளிட்ட பல இடங்களில் உணரப்பட்டது. சுமார் 2 வினாடிகளே இருந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் ஆடி உள்ளன.
தேசிய நில நடுக்க ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் 4 ரிக்டர் அளவில் பதிவானதாக கூறி உள்ளது. இந்த நிலநடுக்கம் ராமகுண்டத்தில் இருந்து தென்மேற்கே 8 கிமீ மற்றும் கரீம்நகருக்கு வடகிழக்கே 45 கிமீ தூரத்தில் பூமிக்குள் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி தெருவுக்கு வந்துள்ளனர். இது மிகக் குறைந்த அளவில் பதிவாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவை இல்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆயினும் ம்கக்களிடையே கடும் அச்சம் நிலவுகிறது.