டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி 31% ஆக உயத்தப்பட்டு உள்ளது.. இந்த அகவிலைப்படி உயர்வு  ஜூலை 2021 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது மத்தியஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக அமைந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் செப்டம்பர் முதல் 28% அகவிலைப்படி பெறத் தொடங்கியுள்ளனர். எனினும், விரைவில் அரசாங்கம் ஜூன் மாதத்தின் அகவிலைப்படியையும் சேர்த்து வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்போது 3 சதவிகிதம் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்தியஅரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 28%லிருந்து  31% ஆக அதிகரித்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்தி வழங்க மத்தியஅமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது என்றும், இது  ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கணக்கிட்டு, முன்தேதியிட்டு புதிய அகவிலைப்படி வழங்கப்படும் என கூறினார்.

து. அகவிலைப்படி உயா்வால் மத்திய அரசு ஊழியா்கள் 47.14 லட்சம் பேரும், ஓய்வூதியதாரா்கள் 68.62 லட்சம் பேரும் பயனடைவாா்கள். இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.9,488.70 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கந்த ஆண்டு அகவிலைப்படி உயர்த்தப்படாத நிலையில், 2021  ஜூலை மாதம் 11 சதவீத அகவிலைப்படியை மத்தியஅரசு உயர்த்தியது. இதனால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது மேலும் 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டு,31 சதவீதமாக உயர்ந்துள்ளது.