சென்னை:  முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு மற்றம் அவரது உறவினர்கள், நண்பர்கள் என சுமார்  43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்தியது. இதில்,  ரூ.23,85,700 பணம் 4,870 தங்கம். , 138 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், மற்றும் சொத்து ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தகவலை தெரிவித்தது.

இதையடுத்து விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் மற்றும் சந்திரசேகர் ஆகியோரின் இடங்களை பூட்டி சீல் வைத்தனர். சீல் வைக்கப் பட்டுள்ள சரவணன் மற்றும் சந்திரசேகரின் வீட்டில் மீண்டும் சோதனையிடுவதற்கான நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோரின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்த முடிவு செய்திருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.23,85,700 பணம் 4,870 தங்கம் உள்பட ஏராளமான ஆவணங்கள்! லஞ்சஒழிப்புத்துறை தகவல்…