டில்லி

டுத்த ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்காவில் அமலாகும் புதிய விதிகளால் தங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என இந்திய வங்கிகள் தெரிவித்துள்ளன.

தற்போதைய விதிமுறைப்படி அமெரிக்காவில் உள்ள வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் விவரங்களை ஏதாவது விசாரணைக்குத் தேவைப்படும் போது அரசுக்கு அளிக்க வேண்டும் என உள்ளது.  அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இந்த விதி மாற்றி அமைக்கப்பட உள்ளது.  அமெரிக்காவின் திருத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து வாடிக்கையாளர்களின் விவரங்களையும் அமெரிக்க அரசிடம் பகிர்வது கட்டாயம் ஆகி உள்ளது.

இதனால் இந்திய வங்கிகள் மத்திய அரசுக்கு, “வங்கிகளுக்கு அமெரிக்க அரசின் புதிய விதிமுறைகள் நிச்சயமாகப் பல சிரமங்களை உண்டாக்கும்.  அந்நாட்டின் அரசுக்கு அனைத்து வாடிக்கையாளர்களின் விவரங்களையும் அளிக்க வேண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடையலாம்.   இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து வங்கி உயரதிகாரி ஒருவர், “அமெரிக்காவின் புதிய கட்டுப்பாட்டால் வங்கிகளுக்கு அதிக செலவாகும்.   வங்கிகள் கூடுதலான பணியாளர்களை நியமிக்க வேண்டி வரும.  இந்த விதிமுறைகளை நிறைவேற்றுவதில் குறை ஏற்பட்டால் கடுமையான தாக்கங்கள் உருவாகும்.  அமெரிக்கா அரசுக்கு விசாரணைக்காக எந்த வாடிக்கையாளர் விவரம் தேவைப்படுகிறதோ அதை மட்டும் அளிப்பதே பொருத்தமாக இருக்கும்” எனக் கூறி உள்ளார்.