வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,27,66,855 ஆகி இதுவரை 49,36,885 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,404 பேர் அதிகரித்து மொத்தம் 24,27,66,855 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,472 பேர் அதிகரித்து மொத்தம் 49,36,885 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,89,038 பேர் குணம் அடைந்து இதுவரை 22,04,48,021 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,77,81,949 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,072 பேர் அதிகரித்து மொத்தம் 4,60,82,019 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1998 அதிகரித்து மொத்தம் 7,51,692 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,57,99,246 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,359 பேர் அதிகரித்து மொத்தம் 3,41,26,682 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 160 அதிகரித்து மொத்தம் 4,52,844 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,34,88,181 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,610 பேர் அதிகரித்து மொத்தம் 2,16,80,489 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 401 அதிகரித்து மொத்தம் 6,04,303 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,08,61,056 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,139 பேர் அதிகரித்து மொத்தம் 85,89,737 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 179 அதிகரித்து மொத்தம் 1,39,031 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 70,28,711 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,073 பேர் அதிகரித்து மொத்தம் 80,94,825 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1028 அதிகரித்து மொத்தம் 2,26,353 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 70,17,0555 பேர் குணம் அடைந்துள்ளனர்.