டில்லி
இந்தியாவில் நேற்று 18,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,41,26,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,357 அதிகரித்து மொத்தம் 3,41,26,682 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 160 அதிகரித்து மொத்தம் 4,52,844 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 17,558 பேர் குணமாகி இதுவரை 3,34,88,181 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,72,519 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 1,825 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,96,645 ஆகி உள்ளது நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,886 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,879 பேர் குணமடைந்து மொத்தம் 64,27,426 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,728 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 11,150 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 48,79,790 ஆகி உள்ளது. இதில் நேற்று 82 பேர் உயிர் இழந்து மொத்தம் 27,084 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,592 பேர் குணமடைந்து மொத்தம் 47,69,373 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 82,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 462 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,84,484 ஆகி உள்ளது இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,976 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 479 பேர் குணமடைந்து மொத்தம் 29,37,405 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,074 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,170 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,90,633 ஆகி உள்ளது இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,948 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,418 பேர் குணமடைந்து மொத்தம் 26,40,627 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,058 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,61,810 ஆகி உள்ளது. நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,320 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 608 பேர் குணமடைந்து மொத்தம் 20,41,924 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,566 பேர் சிகிச்சையில் உள்ளனர்.